Tuesday, January 28, 2014

அத்தியாயம் 3 - இந்திய திரைப்பட இசை அடிப்படைகள்

இந்திய திரைப்பட இசை அடிப்படைகள்

 


ஒரு அடிபடையான இந்திய திரை இசை பாடல்களின் ஸ்டாண்டர்ட் structure இது தான் ...சில விதி மீறல்களும் உண்டு ...சில சமயங்களில் எப்போதாவது மூன்றாவது சரணம்,ஒரு concluding interlude வரும் .


இந்த இலக்கணத்தை தமிழ் இசை பாடல்களில் வெற்றிகரமாக நிறுவியவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தியைச்சொல்லலாம்.அப்போ நியூட்டன்னுக்கு முன்னர் புவிஈர்ப்பு இல்லையா என்று கேட்ககூடாது.இதை நடைமுறை படுத்தியவர்கள் என்ற பெருமை அவர்களுக்கு உண்டு.வெறும் தம்புரா சுருதியை மட்டும் வைத்துகொண்டு அவர்கள் இசை அமைத்த 'மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா' என்ற 'கர்ணன்' பட பாடல்,பண்டிட் ராம்நாராயண், சாரங்கி இசை கலைஞரை  தன் படங்களுக்கு இசைக்க அழைத்தது இவர்கள் சிறப்பம்சம்.பல பிரமுகர்கள் வாழ்கையை மாற்றியது இவர்கள் பாடல்கள் என்றால்   மிகையில்லை. இவர்கள் இருவரும் பிரிந்தது ஒரு பெரிய விபத்து என்றே சொல்லலாம்.



ராமமூர்த்தி தனியாக வந்து 'மறக்க முடியுமா' படத்தில் வரும் 'காகித ஓடம் கடல் அலை மீது ...' போன்ற பாடலை உருவாக்கினாலும் வெற்றி அடைய முடியவில்லை.போக போக விஸ்வநாதன் இசையில் இருந்த நல்ல விஷயங்கள் குறைந்து இரைச்சல் அதிகமானது.கே வி மகாதேவனின் இசை எப்பொதும் போல ஒரே மாதிரியான நிலையிலே இருந்தது .அவரின் மெட்டுகளும் ,interlude எல்லாம் ஒரு சமயத்தில் repetition மாதிரி அவரது பழைய மெட்டுகள் மாதிரியே  இருந்தது. இப்படி பல விஷயங்கள் சேர்ந்து தமிழ் திரை இசை இம்சையாகி, கேட்க முடியாமல் போய் விட்டது. வி குமார், விஜய பாஸ்கர், ஜி கே வெங்கடேஷ் , ஷ்யாம், போன்றவர்கள் நல்ல பாடல்கள் சில கொடுத்தாலும் நிலையான இசையை அவர்களாலும் கொடுக்க இயலவில்லை என்று தான் சொல்லணும் . இதில் சங்கர்-கணேஷ் ஐ மறந்து விட்டேன் என்று நினைகிறீர்களா ? அவர் ஒரு கம்போசரே அல்ல . அவருடைய நல்ல பாடல்கள் எல்லாம் விஸ்வநாதன் பாடல்களில் இருந்தும் மோசமான பாடல்கள் கே வி மகாதேவனின்  சராசரி பாடல்கள்களின் மெட்டுகளில்  இருந்து  சுட்டது.அவரின் 'மேகமே மேகமே ...' பாடல் கூட ஒரு ghazel  ன்  அப்பட்டமான காப்பி.மொத்தத்தில் அவர் இப்போதைய தேவா .தங்களுக்கு என  தனி பாணி எதுவும் உருவாக்கி கொள்ளாதவர்கள்.   



இப்படி தமிழ் திரை இசையின் இருண்டகாலம் தொடர்ந்து கொடிருந்தபோது தான் விடி வெள்ளியாக இளையராஜா முளைத்தார் . தமிழ் தரை இசைக்கு புது ரத்தம் பாய்ச்சினார் தன் மெலடிகளால்.அவரின் தி பெஸ்ட் என்று ஒரு பத்து அல்லது  இருபது பாடல்களை என்னால் சொல்ல இயலாது.ஒரு இருநூறு அல்லது முந்நூறு பாடல்கள் சொல்லலாம்.

99% இந்தியன் திரை இசை பாடல்களில்  concluding interlude (postlude ?) கிடையாது. Interludes do  not  normally involve  the  main  singers with  the  exception  of  humming . எப்பவுமே அது இசையாகவோ கோரஸகவோ தான் இருக்கும். Concluding  interlude  க்கு   ஒரு நல்ல உதாரணம் 'மேகம் கொட்டட்டும் ....' என்கிற எனக்குள் ஒருவன் பட பாடல். மூன்றாவது சரணம் உள்ள பாடல் 'சிறிய  பறவை சிறகை ...' என்கிற அந்த ஒரு நிமிடம் பட பாடல் அல்லது 'சாமக்கோழி கூவுதம்மா ...' என்கிற பொண்ணு ஊருக்கு புதுசு பட பாடல். Both  are  musically  rich  one .