Tuesday, January 28, 2014

அத்தியாயம் 3 - இந்திய திரைப்பட இசை அடிப்படைகள்

இந்திய திரைப்பட இசை அடிப்படைகள்

 


ஒரு அடிபடையான இந்திய திரை இசை பாடல்களின் ஸ்டாண்டர்ட் structure இது தான் ...சில விதி மீறல்களும் உண்டு ...சில சமயங்களில் எப்போதாவது மூன்றாவது சரணம்,ஒரு concluding interlude வரும் .


இந்த இலக்கணத்தை தமிழ் இசை பாடல்களில் வெற்றிகரமாக நிறுவியவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தியைச்சொல்லலாம்.அப்போ நியூட்டன்னுக்கு முன்னர் புவிஈர்ப்பு இல்லையா என்று கேட்ககூடாது.இதை நடைமுறை படுத்தியவர்கள் என்ற பெருமை அவர்களுக்கு உண்டு.வெறும் தம்புரா சுருதியை மட்டும் வைத்துகொண்டு அவர்கள் இசை அமைத்த 'மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா' என்ற 'கர்ணன்' பட பாடல்,பண்டிட் ராம்நாராயண், சாரங்கி இசை கலைஞரை  தன் படங்களுக்கு இசைக்க அழைத்தது இவர்கள் சிறப்பம்சம்.பல பிரமுகர்கள் வாழ்கையை மாற்றியது இவர்கள் பாடல்கள் என்றால்   மிகையில்லை. இவர்கள் இருவரும் பிரிந்தது ஒரு பெரிய விபத்து என்றே சொல்லலாம்.



ராமமூர்த்தி தனியாக வந்து 'மறக்க முடியுமா' படத்தில் வரும் 'காகித ஓடம் கடல் அலை மீது ...' போன்ற பாடலை உருவாக்கினாலும் வெற்றி அடைய முடியவில்லை.போக போக விஸ்வநாதன் இசையில் இருந்த நல்ல விஷயங்கள் குறைந்து இரைச்சல் அதிகமானது.கே வி மகாதேவனின் இசை எப்பொதும் போல ஒரே மாதிரியான நிலையிலே இருந்தது .அவரின் மெட்டுகளும் ,interlude எல்லாம் ஒரு சமயத்தில் repetition மாதிரி அவரது பழைய மெட்டுகள் மாதிரியே  இருந்தது. இப்படி பல விஷயங்கள் சேர்ந்து தமிழ் திரை இசை இம்சையாகி, கேட்க முடியாமல் போய் விட்டது. வி குமார், விஜய பாஸ்கர், ஜி கே வெங்கடேஷ் , ஷ்யாம், போன்றவர்கள் நல்ல பாடல்கள் சில கொடுத்தாலும் நிலையான இசையை அவர்களாலும் கொடுக்க இயலவில்லை என்று தான் சொல்லணும் . இதில் சங்கர்-கணேஷ் ஐ மறந்து விட்டேன் என்று நினைகிறீர்களா ? அவர் ஒரு கம்போசரே அல்ல . அவருடைய நல்ல பாடல்கள் எல்லாம் விஸ்வநாதன் பாடல்களில் இருந்தும் மோசமான பாடல்கள் கே வி மகாதேவனின்  சராசரி பாடல்கள்களின் மெட்டுகளில்  இருந்து  சுட்டது.அவரின் 'மேகமே மேகமே ...' பாடல் கூட ஒரு ghazel  ன்  அப்பட்டமான காப்பி.மொத்தத்தில் அவர் இப்போதைய தேவா .தங்களுக்கு என  தனி பாணி எதுவும் உருவாக்கி கொள்ளாதவர்கள்.   



இப்படி தமிழ் திரை இசையின் இருண்டகாலம் தொடர்ந்து கொடிருந்தபோது தான் விடி வெள்ளியாக இளையராஜா முளைத்தார் . தமிழ் தரை இசைக்கு புது ரத்தம் பாய்ச்சினார் தன் மெலடிகளால்.அவரின் தி பெஸ்ட் என்று ஒரு பத்து அல்லது  இருபது பாடல்களை என்னால் சொல்ல இயலாது.ஒரு இருநூறு அல்லது முந்நூறு பாடல்கள் சொல்லலாம்.

99% இந்தியன் திரை இசை பாடல்களில்  concluding interlude (postlude ?) கிடையாது. Interludes do  not  normally involve  the  main  singers with  the  exception  of  humming . எப்பவுமே அது இசையாகவோ கோரஸகவோ தான் இருக்கும். Concluding  interlude  க்கு   ஒரு நல்ல உதாரணம் 'மேகம் கொட்டட்டும் ....' என்கிற எனக்குள் ஒருவன் பட பாடல். மூன்றாவது சரணம் உள்ள பாடல் 'சிறிய  பறவை சிறகை ...' என்கிற அந்த ஒரு நிமிடம் பட பாடல் அல்லது 'சாமக்கோழி கூவுதம்மா ...' என்கிற பொண்ணு ஊருக்கு புதுசு பட பாடல். Both  are  musically  rich  one .

Monday, January 20, 2014

The King Of Ghazels



அத்தியாயம் 2

எனக்குள்  ஒரு நல்ல ரசனையை உண்டாக்கியவர்.சின்ன வயசில் மட்டுமல்ல இப்பவும், இவர் பாடலை, எந்த சேனலில்,ரேடியோ ஸ்டேஷன்ல் கேட்டாலும் அது முடியும் வரை மாற்ற மனது வராது. இவரும் லதா  மங்கேஸ்கர் இருவருக்கும் உள்ள எண்ண அலைகள் சரியாக சேர்ந்து ஒவ்வொரு பாடலும் ஒரு தனி ரகம். அவர் தான், மதன் மோகன்.




14. 'Madan  Mohan ' (25 June 1924 - 14 July 1975) -   http://en.wikipedia.org/wiki/Madan_Mohan_(music_director).  He is particularly remembered for the ghazals he composed for the film industry, mainly using the voice of Lata Mangeshkar, Talat Mahmood and Mohammed Rafi.

1950  Aankhen     
1951  Adaa 
1951  Madhosh    
1952  Aashiana    
1952  Anjaam       
1952  Khoobsurat 
1952  Nirmohi       
1953  Baaghi        
1953  Chacha Choudhary        
1953  Dhoon        
1954  Ilzaam        
1954  Mastana     
1955  Ehsaan       
1955  Railway Platform   
1956  Bhai Bhai    
1956  Fifty Fifty    
1956  Mem Sahib  
1956  Pocket Maar
1956  Rajdhani     
1957  Beti   
1957  Chhote Babu        
1957  Dekh Kabhira Roya         
1957  Gateway Of India 
1957  Samundar   
1957  Sheru
1958  Aakhri Dao  
1958  Adalat         
1958  Chandan    
1958  Ek Shola     
1958  Jailor 
1958  Khazanchi   
1958  Khota Paisa 
1958  Night Club  
1959  Baap Bete   
1959  Bank Manager      
1959  Chacha Zindabaad
1959  Duniya Na Maane 
1959  Jaagir
1959  Minister      
1959  Mohr 
1960  Bahaana     
1961  Sanjog        
1961  Senapati     
1962  Anpadh       
1962  Manmauji   
1963  Akeli Mat Jaiyo     
1964  Aap Ki Parchhaiyan        
1964  Gazal
1964  Haqeeqat    
1964  Jahan Ara   
1964  Pooja Ke Phool      
1964  Sharabi       
1964  Suhagan     
1964  Woh Kaun Thi?     
1965  Bombay Race Course      
1965  Naya Kanoon        
1965  Neela Aakash       
1965  Rishte Naate         
1966  Daak Ghar  
1966  Dulhan Ek Raat Ki
1966  Ladka Ladki
1966  Mera Saaya 
1966  Neend Hamari Khwab Tumhare
1967  Ghar Ka Chirag     
1967  Jab Yaad Kisi Ki Aati Hai 
1967  Naunihal     
1967  Nawab Sirajuddaula       
1968  Ek Kali Muskaai    
1969  Chirag        
1970  Dastak        (Won - National Film Award for Best Music Direction )
1970  Heer Raanjha       
1970  Maa Ka Aanchal    
1970  Maharaja    
1971  Parwana     
1972  Bawarchi     
1972  Koshish      
1972  Sultana Daku       
1973  Ek Mutthi Aasmaan        
1973  Hanste Zakhm      
1973  Hindustan Ki Kasam       
1973  Prabhat       
1974  Asliyat        
1974  Chowkidar  
1975  Dil Ki Rahen
1975  Mausam      
1976  Laila Majnu 
1976  Sharafat Chod Di Maine 
1977  Saheb Bahadur     
1978  Jalan 
1979  Inspector Eagle    
1980  Chaal Baaz 
2004  Veer-Zaara

இவரது Woh Kaun Thi?(1964) பாடல்கள் எல்லாம் தமிழில் வந்த 'யார் நீ ?'(1966)  படத்தில் அப்படியே போட்டு இருப்பார் 'வேதா' என்கிற மியூசிக் டைரக்டர். இவரது 'Anpadh '(1962) , Aap Ki Parchhaiyan (1964),Ghazal (1964),Jahan Ara (1964) ,Sharabi (1964),Woh Kaun Thi?(1964),Mera Saaya(1966),Chirag(1969),Dastak(1970),மாசம்(1975) இந்த படப்பாடல்களை கேட்டு விட்டு சொல்லுங்கள் ஏன் இவர் மட்டும் ஸ்பெஷல் என்று.நிறைய நல்ல படங்களை விட்டு இருப்பேன் என்று நினைக்கிறன்,(இவரது வினைல் ரெகார்டுகளை மும்பை போகும் போதெல்லாம்,யார் போனாலும், தம்பி or நண்பன் 'India  Music  House ' போய் வாங்கி) அல்மோஸ்ட் இவர் collection எல்லாம் இருக்கு. இவரது ஒவ்வொரு பாட்டை பற்றியும் தனியாக ஒரு அத்தியாயம் போடுமளவுக்கு எழதலாம். இப்போ நான் இளையராஜா பற்றி எழுததான் இதை ஆரம்பித்தேன் அதனால் அதை பற்றி விரிவாக எழதவில்லை.



இவ்வளவு வகை பாடல்களை கேட்டவர்களுக்கு எப்படி தமிழ் பாடல் கேட்க பிடிக்கும்?. ஆனால் அந்த சமயத்தில் வந்த ஒரு விடி வெள்ளி  எல்லோரையும் தமிழ் பாடல் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது,1976ல் 'அன்னக்கிளி' மூலம்.