Tuesday, January 14, 2014

நகர்வது போல் நிற்கும் ஆறு


அத்தியாயம் 1


எங்கேயோ படித்த ஒரு விஷயம்.அரியக்குடி ராமானுஜ அய்யங்காரும் எம் கே டி பாகவதரும் ரயில் நிலையத்தில் சந்தித்து கொண்டார்களாம். பாகவதர் மிகவும் பணிவாக வணக்கம் சொன்னார்.அய்யங்கார், 'இதிலேன்னபா இருக்கு,நாங்கள் மேடையில் செய்கிறதை நீ சினிமாவில் செய்கிறாய்' என்றாராம்.உண்மை அதுதான். பாகவதரின் 'ராஜன் மகாராஜன்' என்ற பாடல்,முழுமையான கீர்த்தனை மாதிரி இருக்கும். (வயலினின் வருகைக்கு முன் வீணை தான் வாய்ப்பாட்டுக்கு பக்க வாத்தியமாக இருந்தது). 
தமிழ் திரை இசையில் சி ஆர் சுப்பு ராமன் , ஜி ராமநாதன் , எஸ் வி வெங்கட் ராமன் ,டி ஆர் பாப்பா போன்ற பெரிய கம்போசர்கள் மரபிசையின் ஆழம் கெடாமல் இசை அமைத்தனர்.எப்போது மாற்றம் வந்தது என்று தெரியாதபடி புதிதாக ஒரு வகையான இசை மரபு தோன்றி ஆரம்பகாலத்திலேயே தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கி கொண்டது.அது தன் பசிக்கு எல்லா இசை மரபுகளையும் தின்று விட்டது.
இந்த தருணத்தில் தெற்கில் இருக்கும் நல்ல இசை பிரியர்களுக்கு தீனி இல்லாமல் பலரும் ஹிந்தி திரை இசை பாடல்களை கேட்க ஆரம்பித்தனர். அங்கே அவர்கள் பெரும் பசிக்கு நிறைய தீனி கிடைத்தது. ஏகப்பட்ட வெரைட்டி ..


1.Naushad Ali (25 December 1919 – 5 May 2006) - He is also known for introducing the legendary singers Lata Mangeshkar and Mohammad Rafi . (http://en.wikipedia.org/wiki/Naushad ) , Kohinoor(1960), Mughal-e-Azam(1960), MereMehboob(1963), Leader(1964), Dil Diya Dard Liya(1965), Saaz Aur Awaaz(1966), Palki(1967), Aadmi(1968), Pakeezah(1971), என்ற படங்கள் உடனே நினைவுக்கு வரும். இவர் எனக்கு தெரிந்து, ஒரு மலையாள படமும் இசை அமைத்தார் Dhwani(1988). இதில் குறிப்பிட்ட பட பாடல்கள் மட்டும் கேட்டாலே இவரின் தனித்திறமை புரியும். இவரின் interlude லிருந்து ஏகப்பட்ட மெட்டுகள் எடுக்கலாம்.

2.Roshan (14 July 1917 – 16 November 1967)-http://en.wikipedia.org/wiki/Roshan_(music_director) , Barsaat Ki Raat (1960), Aarti (1962), Taj Mahal (1963), Devar (1966) , Mamta (1966), Anokhi Raat (1968), இவரின் பெஸ்ட் எனலாம். ஒரு உபரி தகவல் நடிகர் ரித்திக் ரோஷன்னின் தாத்தா தான் இவர். ரோஷனின் மகன் ராகேஷ் ரோஷன்னின் மகன் ரித்திக் ரோஷன்.ராகேஷ் ரோஷனும் இசை அமைத்து இருக்கிறார் சில படங்களுக்கு.

3.SDBurman(1October1906–31October1975)http://en.wikipedia.org/wiki/S._D._Burman
இந்தியாமுழுவதும் பெரும் வெற்றி அடைந்த 'ஆராதனா' படம் இவர் கம்போஸ் பண்ணியது தான். 

4.Jaidev (3 August 1919-6 January 1987) -http://en.wikipedia.org/wiki/Jaidev . இவர் கம்போஸ் பண்ணியதில் Reshma Aur Shera [1971] வும் Alaap [1977] ம், என்னை பொறுத்தவரை 'தி பெஸ்ட்'. அதற்கு பிறகு Gharonda [1977],Tumhare Liye [1978], Dooriyaan [1979],Gaman [1979]. 


5. SalilChowdhury (19 November 1922 - 5 September 1995) -http://en.wikipedia.org/wiki/Salil_Chowdhury , இவர் மலையாளத்திலும் தமிழுலும் இசை அமைத்து இருக்கிறார். 'செம்மீன்' (1967) மலையாளம் தான் இவரின் இசையில் வந்த முதல் தென்னிந்திய மொழி திரை படம். 'உயிர்' (1971) என்ற தமிழ் படத்துக்கு BGM மட்டும், 'கரும்பு' (1973) , 'பருவ மழை '(1978), 'அழியாத கோலங்கள்' (1979), 'தூரத்து இடி முழக்கம்' (1980) போன்ற படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார்.

6. O P Nayyar ((16 January 1926 – 28 January 2007) -http://en.wikipedia.org/wiki/O._P._Nayyar . இவருக்கு உள்ள ஒரு சிறப்பு லதா மங்கேஸ்கர் இல்லாமலே வெற்றி கண்டவர். He never worked with Bollywood's leading female singer Lata Mangeshkar. The Lata Mangeshkar’s song "Ek To Balam Teri Yaad Satayein" from 1958 film 'Aji Bas Shukriya ' was used in a 1973 movie 'Taxi Driver ', for which O. P. Nayyar was the Music Director. This song was originally composed by Faruk Kaiser & Roshan .எனக்கு பிடித்த இவர் இசை அமைத்த படங்கள்' Phir Wohi Dil Laya Hoon ' (1963), 'Kashmir Ki Kali ' (1964) , 'Mere Sanam ' (1965).


7. Shankar - Jaikishan ( who worked together from 1949–1971) -http://en.wikipedia.org/wiki/Shankar_Jaikishan . Dil Apna Aur Preet Parai(1961), Professor (1963), Dil Ek Mandir (1964), Sangam (1965), Arzoo (1966), Mere Huzoor (1968), Brahmachari (1969), Mera Naam Joker (1972), பட பாடல்கள் இவர் இசையில் எனக்கு பிடித்தவை.

8.Khayyam (18 February 1927) -http://en.wikipedia.org/wiki/Mohammed_Zahur_Khayyam , Whose career spanned four decades (1953–1990). National Film Award for Best Music Direction: 'Umrao Jaan ' (1982). எனக்கு இவர் இசை அமைத்ததில் 'Kabhi Kabhie ' (1976) , 'Thodi Si Bewafaai ' (1980) ,'Umrao Jaan ' (1981) ,'Bazaar ' (1982) , 'Razia Sultan ' (1983) போன்ற பட பாடல்கள் பிடிக்கும்.

9. Laxmikant Pyarelal (They composed music for about 635 Hindi movies from 1963 to 1998) -http://en.wikipedia.org/wiki/Laxmikant–Pyarelal. எனக்கு இவர் இசையில் Do Raaste (1971), Shor (1973), Bobby (1974) பிடிக்கும்.


10. R D Burman (27 June 1939 – 4 January 1994) -http://en.wikipedia.org/wiki/R._D._Burman . எனது பள்ளி பருவத்தில் வந்த இவரது 'Yaadon Ki Baaraat ' (1974), 'Aap Ki Kasam ' (1975), Khel Khel Mein ( 1976) ,' Mehbooba (1977), (1978ல் என் கல்லூரி பருவத்தில் தான் எங்களூரில் இந்த படம் வந்தது), பாடல்கள் பிடிக்கும் . இவரது மாஸ்டர் பீஸ் என்றால் 'Masoom ' (1984) , 'Kinara '(1978) இந்த இரண்டும் எப்பொதும் என் ஆல் டைம் பாவரிட். இதில் சில பாடல்கள் இப்போ கேட்டாலும் விழி ஓரம் நீர் வருவதை தடுக்க முடியாது. எப்பவுமே நான் அப்படிதான், ஹிந்தி பாடல்களின் அர்த்தம் தெரியாவிட்டாலும், அந்த மெட்டும், emotionம் கண் கலங்க வைக்கும்.நல்ல பாடல்களின் சக்தி அதுதான்.

11. Ravi (3 March 1926 – 7 March 2012) -http://en.wikipedia.org/wiki/Ravi_(music_director) . இவரும் நிறைய மலையாள படங்கள் இசை அமைத்து இருக்கிறார். Panchagni (1986),Nakhakshathangal (1986), Vaishali (1988),Oru Vadakkan Veeragatha (1989),Vidhyarambham (1990),Sargam (1992),Sukrutham (1992),Ghazal (1993),Padheyam (1993),Parinayam (1994),Kalivaakku (Film Not Released)(1996),Five Star Hospital (1997),Manassil Oru Manjuthulli (2000),Mayookham (2005). இவர் பாடல்கள் பெரிதாக என்னை கவரவில்லை,இப்போ ஒன்றும் ஞாபகம் வரலை. Chaudhvin Ka Chand (1960) மட்டும் தான் உடனே நினைவுக்கு வருகிறது.


12. Ravindra Jain ( 28 February 1944) -http://en.wikipedia.org/wiki/Ravindra_Jain . இவரின் பாடலை முதன் முதலில் பத்தாவது படிக்கும் போது கேட்டேன். 'Chor Machaye Shor ' (1974) தான் நான் கேட்ட இவரின் முதல் படம். எனக்கு சித்திரை விஷுவுக்கு கிடைத்த காசில் லாங் ப்ளே வாங்க காசு பத்தாததால் extented play (EP ) ரெகார்ட் (வினெய்ல்) வாங்கினேன்,(அப்போ EP பதினாறு ரூபாய், LP நாப்பது ரூபாய் ) ஆனால் இவர் இசை அமைத்ததில் 'Chitchor ' (1976), Daasi (1981) தி பெஸ்ட். 

13.Kalyanji Anandji(1954–present)-http://en.wikipedia.org/wiki/Kalyanji_Anandji
இவர்களும் என்னை கவரவில்லை,எப்போவோ ஒரு ஆவரேஜ் லெவல் பாடல் வெளிவரும் இவர்களிடமிருந்து."Yeh Sama, Sama hai yeh pyar Ka" (Jab Jab Phool Khile, 1965),"Pardesiyon Se aakhiyan milana" (Jab Jab Phool Khile, 1965),முதன் முதலில் நேஷனல் அவார்ட் வாங்கிய படமான 'Saraswatichandra' (1968) மட்டுமே ஞாபகம் வருகிறது.ஆனால் ரேடியோ சிலோன் இல் 'பினாகா கீத் மாலா ' என்ற புதன் தோறும் இரவு 8.00 மணியிலிருந்து 8.30 வரை போடும் நிகழ்ச்சி இல் இவர்கள் பாடல்கள் நிறைய நம்பர் ஒன்இல் இருந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்து, Murphy (மினி மாஸ்டர் II ) ட்ரான்ஸ்சிஸ்டரில் எங்கள் கன்னியாகுமரி வீட்டு முற்றத்தில் சிமெண்ட் தரையில் படுத்து கொண்டே கேட்டது ஞாபகம் வருகிறது. அமீன் சயானி என்பவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.அவரின் ஸ்டைல் எனக்கு ரெம்ப பிடிக்கும்.அதே போல் பேசி பார்ப்பேன்.....

எல்லோரையும் அல்மோஸ்ட் கவர் பண்ணிட்டேனு நினைக்கிறன்.ஹிந்தி பாடல்கள் கேட்டவர்களுக்கு தெரியும் நான் முக்கியமான ஒருத்தரை பற்றி சொல்லவே இல்லை என்று.யார் அவர் ?

(தொடரும்)

National Film Award for Best Music Direction .

1967–1980

K. V. Mahadevan (1967) Kalyanji Anandji (1968) S. Mohinder (1969) Madan Mohan (1970) Jaidev (1971) S. D. Burman (1972) Satyajit Ray (1973) Ananda Shankar (1974) Bhupen Hazarika (1975) B. V. Karanth (1976) B. V. Karanth (1977) Jaidev (1978) K. V. Mahadevan (1979) Satyajit Ray (1980).

1981–2000

Khayyam (1981) Ramesh Naidu (1982) Ilaiyaraaja (1983) Jaidev (1984) Ilaiyaraaja (1985) M. Balamuralikrishna (1986) Vanraj Bhatia (1987) Ilaiyaraaja (1988) Sher Chowdhary (1989) Hridaynath Mangeshkar (1990) Rajat Dholakia (1991) A. R. Rahman (1992) 
Johnson (1993) Ravi (Bombay) (Songs) and Johnson (Background score) (1994) Hamsalekha (1995) A. R. Rahman (1996) M. M. Keeravani (1997) Vishal Bhardwaj (1998) Ismail Darbar (1999) Anu Malik (2000).

2 comments:

செல்விகாளிமுத்து said...

அடடே அருமை கேசவா சார். வாழ்த்துக்கள்!

Kesava Pillai said...

Thank You