அத்தியாயம் 4
கர்நாடக சங்கீதத்தில் இளையராஜா
பெரிய பெரிய கர்நாடக வித்வான்கள்,விமரிசர்கள் எல்லாம் இளையராஜாவின் அபூர்வமான ராகங்களின் அடிப்படையில் அமைந்த பாடல்களை கண்டு வியக்கின்றனர். பெரும்பாலும் இசை அமைப்பாளர்கள் மோகனம் ,கல்யாணி போன்ற லோ ரிஸ்க் ராகங்களையே தெரிவு செய்வார்கள். ஆனால் இசைஞானி மிக கடினமான ராகங்களில் அனாயாசமாக விளையாடி இருப்பார். இதோ சில உதாரணங்கள் உடனே நினைவுக்கு வருபவை(அவர் இசைஅமைத்த பாடல்களை ஒவ்வொன்றாக கேட்டால் எல்லாம் கடினமான ராகங்களாக தான் இருக்கும் )
1. ரீதிகௌளை (சின்ன கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில் -1977)
2. லதாங்கி (தோகை இளமயில் -
பயணங்கள் முடிவதில்லை - 1982)
3. ஹம்சானந்தி (வேதம் அணுவிலும் - சலங்கை ஒலி -
1983)
4. லலிதா (இதழில் கதை எழுதும் - உன்னால் முடியும் தம்பி - 1988)
5. அமிர்தவர்ஷிணி (தூங்காத விழிகள் ரெண்டு - அக்னி நட்சத்திரம் -1989)
6. பவானி (பார்த்த விழி - குணா -
1992)
7. நளினகாந்தி (எந்தன் நெஞ்சில் - கலைஞன் - 1993)
8. சாரங்க தரங்கிணி (இசையில் தொடங்குதம்மா - ஹே ராம் -
2000)
9. பந்துவராளி (பிறையே - பிதாமகன் -
2004, title music -ராஜா பார்வை (1980)
10.ஆபோஹி (இன்றைக்கு ஏன் இந்த -வைதேகி காத்திருந்தாள்-1984)
11. தர்மாவதி (என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்-ரோசாப்பூ ரவிக்கைகாரி (1979)
தயவு செய்து கவனிக்கவும் நான் சங்கராபரணம், சசாங்கி, சாருகேசி, கீரவாணி,கௌரி மனோகரி,அல்லது நாட்டை பைரவி...
மற்றும் பல ராகங்களை சேர்க்கவில்லை.அதில்லாமல் கர்நாடக சங்கீதம் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை,ஏனென்றல் எனக்கு அது பற்றி எதுவும் தெரியாததால்.இளையராஜாவை பற்றி எழுதும் போது எப்படி கர்நாடக சங்கீதத்தை பிரிக்க முடியும் !
தெரியவில்லை.....எதோ என் அறிவிற்கு எட்டியதை பகிர்கிறேன் பிழை இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். கடினமான ராகத்தை பற்றி எழுதும் போது எம் எஸ் விஸ்வநாதன் மஹதி ராகத்தில் இசை அமைத்த அபூர்வ ராகங்கள் பாடல் ஞாபகம் வருகிறது.
1 comment:
Wonderful...
Post a Comment