Sunday, February 16, 2014

அத்தியாயம் 6- ராஜா ஒரு மேதை

அத்தியாயம் 6


ராஜா ஒரு மேதை


அவர் ஒரு மேதை என ஏன் சொல்கிறேன் ?

ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாததை ஒருவர் செய்யும் போது அவர் மற்ற மனிதர்களிடமிருந்து தனித்திருக்கிறார்,அந்த பிரத்தியேக திறமையினால். எல்லா திறமையான மனிதர்களிடமிருந்தும் இதை எதிர்பாக்கமுடியாது, அது ஒரு மேதையிடமிருந்து  மட்டுமே  கிடைக்கும். மிகவும் திறைமையான இசை கலைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். நமது நாடு ஒரு நல்ல பாரம்பரிய இசைப் பின்னணி கொண்டது.தெற்கே கர்நாடக இசை ,வடக்கு மற்றும் மேற்கே ஹிந்துஸ்தானி இசை, கிழக்கே ரபீந்திரா சங்கீதமும், இதில் எண்ணற்ற நாட்டுப்புற மரபுகளை பற்றி கூற தேவையில்லை.அவர்கள் சொல்வது போல் இசைக்கும் பாயும் ஆற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அது தான்   என் முதல் அத்தியாயத்துக்கு 'நகர்வது போல் நிற்கும் ஆறு' என்று பெயர் வைத்தேன்.
பொதுவாக கம்போசர்கள் அவர்கள் கற்று கொண்ட கருவிகள்,குருக்கள் விதித்த விதிகள்,மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து பாரம்பரியமாக வருவார்கள். வெகு சிலரே இதிலிருந்து தனித்து தன பாணியில் அந்த பாரம்பரிய விதிகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்து சாகசங்கள் செய்ய முடியும்,இதில் நிச்சயமாக இளையராஜா ஒருவர். கமல் ஹாசன் ஒரு முறை கூறியது போல அவர் 'இசை விஞ்ஞானி' , 'இசைஞானி' அல்ல.


No comments: