Tuesday, March 4, 2014

அத்தியாயம் 8 - ‘பேஸிக்கலி’ ராஜா....

அத்தியாயம் 8


‘பேஸிக்கலி’ ராஜா....




இந்திய திரைப்படங்களில் தாள வாத்தியங்களில் தபலா மிகவும் வெற்றிகரமாக பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ராஜா வந்த பிறகு அது வித்தியாசமாக ஒலித்தது. ஏன் என்று பாக்கும் போது அவருக்கென்று அவர் பாடல்களில் எப்பவுமே ஒரு பேஸ் லைன் இருப்பது தெரியவரும், இதுதான் அவரை மற்ற கம்போசர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது.

ராஜா வருவது வரை பேஸ் கிட்டார் பெரும்பாலான திரை இசைகளில் ஒரு விருப்ப அழகுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும், அவரது வெஸ்டேர்ன் க்ளசிகல் மியூசிக் அறிவால் அவரது இசையில் எல்லாம் ஒரு பேஸ் லைன் இல்லாமல் இருக்காது. சில பேஸ் லைன்கள் ரெம்ப மேலோடியஸ் ஆக இருக்கும்,அது தான் அந்த பாடலின் மெலடி லைன். அப்புறம் பாடும் பேஸ்... அது தான் ராஜாவின் தனித்திறமை. அவருடைய நிறைய பாடல்கள் பேஸ் கிட்டார் தான் மெலோடியை சப்போர்ட் பண்ணும், பெரும்பான்மை பாடல்களில் பேஸ் கிட்டாரின் ரிதம் தெரியும்,ஆனால் அது பாடலின்  ரிதத்தோடு ஒத்துப்போகும். சில பாடல்களில் பேஸ் கிட்டார்,மெயின் இசை கருவிக்கு கவுன்டராக வந்தது என்று கூட கூறலாம். அந்த கவுன்டர் பாயிண்ட்  பற்றி பேசும்போது மெயின் வாத்திய கருவி உதாரணமாக புல்லாங்குழல்,கிட்டார், வயோலின், சிந்தசய்செர் எதுவாக இருந்தாலும் அதற்குள் பேஸ் கிட்டார் புகும் போது கடினமாக தெரியாமல் செய்வது தான் அவர் திறமை. இந்த மாதிரி ஒரு திறைமைசாலியின் காலத்தில் நானும் இருக்கிறேன் ...கடவுளுக்கு நன்றி.

சில உதாரணங்களை எடுத்துக்கொள்வோம்……

'நிலவு தூங்கும் நேரம் ..' குங்கும சிமிழ்(1985),இதில் வரும் மௌத்ஆர்கன்(harmonica ) இசையை கேளுங்கள்,அதில் வரும் பேஸ் கிட்டரை கேளுங்கள்,அது ஒரு வித்தியாசமான மெல்லிசையில் இருக்கும்.அந்த காலத்தில் அது ரெம்ப அசாதாரணமானது. மேலும் பாடும் பேஸ் கிட்டரை ஒட்டி வாசிக்கும் மௌத்ஆர்கனை கேளுங்கள்.

'நான் தேடும் செவந்திப்பூவிது...' பாடல் கேட்டு இருக்கிறீர்களா ? Its  one  of  the  best  example  for  the  best  preludes  and  interludes . Abrubt  ஆக முடியும் பாடல், இந்த மாதிரி முடியும் பாடல்கள் கேட்ட திருப்தி இருக்காது,திரும்ப திரும்ப கேட்க தூண்டும்.

நண்டு(1981) படத்திலேருந்து 'அள்ளித்தந்த பூமி ...' பாடலை முழுவதும் கேளுங்கள். பேஸ் கிட்டார் அந்த பாட்டை உச்சரிப்பது போலவே இருக்கும். பேஸ் கிட்டார் இல்லாமல் அந்த பாட்டை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. 

தொண்ணூறுகளில்  வந்த பாட்டை பாக்கலாம், 'மழை வருது மழை வருது குடை கொண்டு வா ...', ராஜா கைய வைச்சா (1991) என்ற பாடலில் பேஸ் கிட்டார் அந்த பாடல் வரிகளை உச்சரிப்பது போல இருப்பது பிரமிப்பாக இருக்கிறது. அப்புறம் 'கொடியிலே மல்லிகைபூ ..' என்று தொடங்கும் கடலோர கவிதைகள்(1986) பாடல் பேஸ் கிட்டாரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு உன்னத பாடல்.

அது போல் ' சின்ன சின்ன வண்ண ..' என்ற மௌன ராகம்(1989) பாடல் ஒரு டூயட் பாடல் என்பேன் நான், தெரியும் எல்லோரும் மறுப்பீர்கள் என்று. அதில் முதல் பாடகி ஜானகி என்றால் இரண்டாவது பாடகர் அல்லது பாடகி பேஸ் கிட்டார் என்பேன். முற்றிலும் வேறுபட்ட அமைப்பில் உள்ள ஒரு பாடல், முக்கிய பாடகி பின்னாலேயே செல்லும் பேஸ் கிட்டார்,ஹட்ச் நாய்(Hutch) மாதிரி.

இனி ராஜாவின் பாடல்களை கேட்கும் போது preludes, interludes  எல்லாம் கவனமாக கேளுங்கள், பாடும் பேஸ் கிட்டரை கேட்கலாம்.

ராகங்கள் மாறுவதில்லை(1983) படத்தில் வரும் 'வான் மீதிலே ..' என்ற துரித வேக பாடலில் பேஸ் கிட்டார் மீண்டும் தன் பங்குக்கு ஜானகியுடன் போட்டி போடுவதை கேளுங்கள். அது போல பன்னீர் புஷ்பங்கள்(1981) படத்தில் 'பூந்தளிர் ஆட ..' பாடலில் வரும் prelude ல் பேஸ் கிட்டார் முறை மெயின் லீட் கிட்டார்லிருந்து  முற்றிலும் மாறுபட்டு அதன் சொந்த மெலோடியில் போய்க்கொண்டிருக்கும். அதே போல் 'பொன் வானம் பன்னீர் தூவுது ..' என்னும் இன்று நீ நாளை நான்(1983) பட பாடல் ஒரு நல்ல உதாரணம்,பேஸ் கிட்டார் ஜானகியுடன் பாடுவது, சிந்தசய்செர், பேஸ் கிட்டார் இரண்டுமே அற்புதமாக இருக்கும். இதே போல் நிறைய பாடல்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

அடுத்து ராஜாவின் நாட்டிய பாடல்களில் கொஞ்சம் கவனம் செலுத்துவோம், அப்படியே ஒரு swing  effect  வர வைத்து விடுவார். உதாரணமாக 'வான் மேகம் ..' புன்னகை மன்னன்(1986), 'ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்..' என்ற இதயத்தை திருடாதே(1989), 'அஞ்சலி அஞ்சலி ..' அஞ்சலி (1990), 'வானிலே தேனிலா...' காக்கி சட்டை(1985).

அவரது semi  classical  மெட்டுகளிலும் பேஸ் கிட்டாரின் பங்கு பிரமிக்கதக்கது. அதாவது பாடல் பாரம்பரிய கர்நாடக சங்கீத ராகத்தில் இருந்தாலும் அதில் வரும் பேஸ் கிட்டார் western  cassical   சார்ந்து இருக்கும். உதாரணமாக 'பனிவிழும் மலர்வனம் ...' என்ற நினைவெல்லாம் நித்யா(1982) பாடல்.இது 'சால நாட்டை' என்ற கர்நாடக ராகம்,இதில் வரும் பேஸ் கிட்டரை கவனியுங்கள். அடுத்து 'ஆகாய வெண்ணிலாவே ...' என்ற அரங்கேற்ற வேளை(1990) பாடல்.இது hidusthani ராகமான 'தர்பாரி கானடா' ராகம், இதில் வரும் பேஸ் கிட்டரை கவனிக்கவும். ' இசை பாடு நீ...'  என்ற இசை பாடும் தென்றல்(1986) ராகம் 'jog '  ஆகும் ,இதில் வரும் பேஸ் pattern  களை கவனிக்கவும்.

லைட் மியூசிக்கில் 'உன்னையும் என்னையும்..' என்ற ஆளப்பிறந்தவன்(1987) படப்பாடலலில் பேஸ் கிட்டார் பல்லவி,சரணம் என்று எங்கும் வியாபித்து இருக்கும். 'நிலா காயுது...' என்ற சகலகலாவல்லவன்(1982) பாடலும் 'இளமை இதோ இதோ..' என்ற மீண்டும் அதே பட பாடலும், 'அடுக்கு மல்லி எடுத்து ..' ஆவாரம் பூ(1992) பாடலும் பேஸ் கிட்டார் புகழ் பாடப்போதுமானதாக இருக்கும்.
 
ஜானகி பாடிய சில தனி பாடல்களை ரெம்ப கஷ்டப்படாமல் இது ராஜ மியூசிக் தான் என்று இசையை பற்றி கொஞ்சம் தெரியாதவர்கள் கூட சொல்லி விடுவார்கள், சில உதாரணங்களை தருகிறேன், மிக சிறந்த பேஸ் கிட்டார் ரிதம் ஏற்பாட்டை விளக்கும் விதமாக சில பாடல்கள்...


1. 'வந்தது வந்தது...'                          - கிளி பேச்சை கேட்கவா(1993)
2. 'பகலிலே ஒரு நிலவினை...'           - நினைவோ ஒரு சங்கீதம்(1987)
3. ' பூங்காற்றே..'                               - குங்கும சிமிழ்(1985)
4. 'நதியோரம் கரையோரம்..'              - ஆவாரம் பூ (1992)  

தபேலா அதன் சொந்த பாணியிலும், பேஸ் கிட்டார் அதன் பாணியில் பயணம் செல்வத்தையும் கவனிக்கவும்.



12 comments:

Unknown said...

தல அனுபவச்சி எழுதி இருக்கீங்க போல...இம்புட்டு அறிவு எனக்கு இல்ல கூர்ந்து கவனிக்கிற அளவுக்கு...அசத்தல் பதிவு...நன்றி.

Unknown said...

தல அனுபவிச்சி எழுதி இருக்கீங்க...நான் இம்புட்டு கூர்ந்து கவனிக்க இது வரைக்கும்..அசத்தல் பதிவு நன்றி

Unknown said...

தல அனுபவிச்சி எழுதி இருக்கீங்க...நான் இம்புட்டு கூர்ந்து கவனிக்க இது வரைக்கும்..அசத்தல் பதிவு நன்றி

Unknown said...

தல அனுபவிச்சி எழுதி இருக்கீங்க...நான் இம்புட்டு கூர்ந்து கவனிக்க இது வரைக்கும்..அசத்தல் பதிவு நன்றி

Unknown said...

தல அனுபவிச்சி எழுதி இருக்கீங்க...நான் இம்புட்டு கூர்ந்து கவனிக்க இது வரைக்கும்..அசத்தல் பதிவு நன்றி

Kesava Pillai said...

நன்றி வெங்கட் :)

தனிமரம் said...

அருமையாக் உணர்ந்து எழுதியிருக்கின்றீங்கள். வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2014/04/blog-post_23.html

வாழ்த்துக்கள்

Kesava Pillai said...

நன்றி தனிமரம் ,திண்டுக்கல் தனபாலன்.

agniashok said...

adada arputham nanbare arputhamana pathivu

Kesava Pillai said...

நன்றி agniashok

Kesava Pillai said...

https://www.youtube.com/watch?v=GVBC0DvWnVw