Saturday, March 29, 2014

அத்தியாயம் 10 - ராஜா saxophone விரிவாக பயன்படுத்திய பாடல்கள்



அத்தியாயம் 10

ராஜா saxophone விரிவாக பயன்படுத்திய பாடல்கள் 





''வா வெண்ணிலா ''          - மெல்ல திறந்தது கதவு(1986)

''மன்றம் வந்த தென்றல்’’     - மௌன ராகம் (1988)

வெஸ்டேர்ன் கிளாசிகல் வயலின் இசையில் வந்த சமீபத்திய பாடல்
''முகிலோ மேகமோ ...- மேகா(2013) தனியாக வயலின் மட்டும் கவனியுங்கள் ...... இன்னொரு உலகிற்கு உங்களை கூட்டிச்செல்லும்.

சமிபத்தில் ''சாமக்கோழி கூவுதம்மா ...- பொண்ணு ஊருக்கு புதுசு(1979) என்ற பட பாடலை கேட்க நேர்ந்தது, அதில் முதல் மற்றும் இரெண்டாவது interlude கேட்கும் போது ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கமான ராஜா அதில் இல்லை. ஆனால் மூன்றாவது  interludeல் வழக்கமான ராஜாவை கேட்க முடிந்தது,synthesizerரும் வயலின்யும் மனம் கவரும் ஒரு கவுண்டர் பாயிண்ட்...

இதை ஏன் மற்ற இசை அமைப்பாளர்கள் செய்ய இயலவில்லை ராஜா செய்வது போல்?, இரண்டு இனிமையான மெலோடியை உருவாக்கி விட்டு, இரண்டு வாத்திய கருவிகள் மூலம் கவுன்ட்டர் பாயிண்ட் கொடுத்து ஒரு சேர வாசித்தால் போதுமே..., இல்லை இல்லவே இல்லை. அதற்கான வெஸ்டேர்ன் கிளாசிகல் மியூசிக்கில் கடுமையான ஆளுமை விதிகள் இருக்கிறது கவுன்ட்டர் பாயிண்ட் இசைப்பதற்கு. ராஜா அதை எளிதாக செய்வது போல் தோன்றும்,மற்றவர்கள் ஏமாந்து விட வேண்டாம். 

  




No comments: