Sunday, February 23, 2014

அத்தியாயம் 7 - ராஜா ஒரு பல்கலைகழகம்

அத்தியாயம் 7

ராஜா ஒரு பல்கலைகழகம்




இன்று சென்னை தான் தந்தி வாத்திய கருவிகள் பதிவு செய்யசிறந்த இடமாக கருதப்படுகிறது,ஏனென்றால் தந்தி வாத்திய கருவி வித்வான்கள் அதிகம். அநேக ஹிந்தி மற்றும் பல மொழி பாடல்கள் இங்கு தான் பதிவு செய்ய ப்படுகிறது.

இந்தியாவின் மிகச்சிறந்த voice  conductors களில் பலர் சென்னையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் நன்கு அனுபவமுள்ள westen  voice  conductors.
பல நல்ல சவுண்ட் ரெகார்டிங் ஸ்டுடியோக்கள் சென்னையில் உள்ளது. இப்போது பாரம்பரிய இசை கருவிகள் வாசிக்கும் வித்வான்கள் மிகக்குறைவு. ஆனாலும் சென்னையில் கிடைப்பார்கள்.

இப்போது எல்லா கம்போசர்களும் ஸ்கோர் ஷீட்,தந்தி,பேஸ்,வாய்ஸ் ட்ரைனிங் , concerts, வீயன்னா, புடி பெஸ்ட் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஏன் சில இசை அமைப்பாளர்கள் சென்னையில் மியூசிக் கன்செர்வடோரி திறந்தார்கள் ?

ஒரு முப்பது வருடங்களுக்கு முன் தமிழ் ,தெலுங்கு இசை அமைப்பாளர்கள் மும்பை சென்று பாடல்கள் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இப்போ எல்லாம் தலை கிழ். எப்படி இந்த மாற்றம் வந்தது! western music talent ம், ஸ்கோர் ஷீட் ஒழுக்கமும் கடந்த முப்பது வருடங்களில் ....



பதில் 'இளையராஜா'.


Sunday, February 16, 2014

அத்தியாயம் 6- ராஜா ஒரு மேதை

அத்தியாயம் 6


ராஜா ஒரு மேதை


அவர் ஒரு மேதை என ஏன் சொல்கிறேன் ?

ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாததை ஒருவர் செய்யும் போது அவர் மற்ற மனிதர்களிடமிருந்து தனித்திருக்கிறார்,அந்த பிரத்தியேக திறமையினால். எல்லா திறமையான மனிதர்களிடமிருந்தும் இதை எதிர்பாக்கமுடியாது, அது ஒரு மேதையிடமிருந்து  மட்டுமே  கிடைக்கும். மிகவும் திறைமையான இசை கலைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். நமது நாடு ஒரு நல்ல பாரம்பரிய இசைப் பின்னணி கொண்டது.தெற்கே கர்நாடக இசை ,வடக்கு மற்றும் மேற்கே ஹிந்துஸ்தானி இசை, கிழக்கே ரபீந்திரா சங்கீதமும், இதில் எண்ணற்ற நாட்டுப்புற மரபுகளை பற்றி கூற தேவையில்லை.அவர்கள் சொல்வது போல் இசைக்கும் பாயும் ஆற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அது தான்   என் முதல் அத்தியாயத்துக்கு 'நகர்வது போல் நிற்கும் ஆறு' என்று பெயர் வைத்தேன்.
பொதுவாக கம்போசர்கள் அவர்கள் கற்று கொண்ட கருவிகள்,குருக்கள் விதித்த விதிகள்,மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து பாரம்பரியமாக வருவார்கள். வெகு சிலரே இதிலிருந்து தனித்து தன பாணியில் அந்த பாரம்பரிய விதிகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்து சாகசங்கள் செய்ய முடியும்,இதில் நிச்சயமாக இளையராஜா ஒருவர். கமல் ஹாசன் ஒரு முறை கூறியது போல அவர் 'இசை விஞ்ஞானி' , 'இசைஞானி' அல்ல.


Tuesday, February 11, 2014

அத்தியாயம் 5 - ஏன் அவர் ஒரு இசை மாமேதை

அத்தியாயம் 5


ஏன் அவர் ஒரு இசை மாமேதை




வேறு எந்த இந்திய இசை அமைப்பாளர்களிடம் இல்லாதது அப்படி என்ன இவரிடம் இருக்கிறது ? எனக்கு தெரிந்த பத்து விஷயங்கள் நான் சொல்கிறேன், இன்னும் இருந்தால் நீங்களும் சொல்லுங்கள்.

1. வேறு எந்த இந்திய இசை அமைப்பாளருக்கும் வெஸ்டன் கிளாசிகல் மியுசிக்கில் இவ்வளவு ஞானம் கிடையாது.

2. ஒரு complete  இசை அமைப்பாளர் இவர். மெலடி அமைப்பதில் (இது எல்லா கம்போசர் களும் செய்வார்கள்),harmonizes தி மெலடி,arrange  the  instruments ,orchestrates and finally  mixes  and  records  as  well ,he  is  a  one  man  show .    

3. உலகின் மிக வேகமான பின்னணி இசை அமைப்பாளர்.

4. மிக சிறந்த interlude creator (இதற்கு முன் நௌஷாத்,மதன்மோகன் இசை அமைத்த பாடல்களில் கேட்ட பிறகு அதை ராஜா இசையில்  தான் கேட்கிறேன் ) அதை ஒரு நிரப்பு இசையாக நினைக்காமல் ஒரு நுண் கலையாக வடிப்பார்(இதை பற்றி நிறைய பேசலாம் பின்னால்...)

5. இசை கருவிகளை வைத்து அவர் ஒவ்வொரு பாடல்களிலும் கொடுத்திருக்கும் இசை வடிவங்கள் எல்லாம் மற்ற யவரையும் இரண்டாவது  என அவர் அருகில் கூட கொண்டு வர முடியவில்லை. இதையும் பின்னர் விரிவாக பாக்கலாம்.

6. அவரது tune    ஹம்பண்ணவோ ,கீ போர்டு ,பியோனோ வில் வாசிக்கவே  மாட்டார்.உடனே ஸ்கோர் சீட் எழுதி  விடுவார்.இது 'மியூசிக் by டிசைன்' , நாட்  ட்ரயல்அண்ட் எர்ரொர்.

7. எந்த ஒரு இசை அமைப்பாளரும் இவளவு தரமான குறைந்த காலத்தில்,உச்சத்தில் இருக்கும் போது கொடுத்ததில்லை. ஒரு வருடத்துக்கு  51 படங்கள்,அதாவது 250 பாடல்கள்  or at the rate of 2 songs a day, work of 125 days. On an average of 3 days for per film BGM, you are already stacking another 150 days. இந்த ஸ்க்ப்ரிட் மற்றும் அதை புரிந்து கொள்ள இயக்குனர் விவாதங்களுக்கு உரிய சமயங்கள் இதில் சேர்க்கப்பட வில்லை.அந்த 250 பாடல்களில் 125 ஹிட் பாடல்கள்,அப்போ வெற்றி விகிதம் 45 க்கு மேல்.பொதுவாக ஒரு இசை அமைப்பாளர் 10% வெற்றி அடைந்தாலே சமாதானமாகி விடுவார்கள்.மற்றவர்களிடம் ஒன்றில் quality அல்லது quantity மட்டும் இருக்கும் இரண்டும் ஒரு சேர இருக்காது. ராஜாவின் பாடல்களுக்கு டாப் 10 என்பதெல்லாம் இல்லவே இல்லை,டாப் 200 அல்லது 300 இப்படிதான்.

8. இவர் ஒருவர் தான் கர்நாடக சங்கீதமும் வெஸ்டன் கிளாசிகலும் மிக நன்றாக தெரிந்தவர். கேட்பவர்களுக்கு தெரியாமலேயே இதிலிருந்து அதுக்கும் அதிலிருந்து இதுக்கும் மிக நேர்த்தியாக நகர்ந்து செல்லும் ஆற்றல் படைத்தவர்.

9.  எந்த ஒரு இசை அமைபாளர்களிடமும் இல்லாத ஸ்கோர் ஷீட் சிஸ்டம் இவரிடம் உள்ளது.ஒரு சாதாரண சொடுக்கு போடும் சத்தம் கூட ஸ்கோர் ஷீட்டில் இல்லை என்றால் அந்த சத்தம் எழாது,கோரஸ் கூட ஸ்கோர் ஷீட் படி தான்

10. ஒரு 'உணர்வை' தத்ரூபமாக கொண்டு வர அவர் எந்த இசை கருவியையும் தைரியமாக கையாள்வார்.அவரது ஷெனாய் துக்கத்துக்கு மட்டும் இல்லை. வீணை ஒரு சந்தோஷமான,விசேஷமான தருணங்களுக்கு மட்டும் இல்லை.புல்லாங்க்குழல் கிராமத்துக்கும் , சாக்ஸ்(saxsaphone ) இளைஞர்களுக்கும் ,கிடார் காதலுக்கும் என்று இருந்த  இசை கருவிகள் வாசித்தல் பற்றி இந்த மூன்று தசாப்தங்களில் அவர் கொண்டு வந்த காட்சி படுத்தல் மாறி விட்டது.
இன்னும் எவ்வளவோ காரணங்கள் இருக்கிறது அவர் ஒரு ஜீனியஸ் என்று சொல்ல. மற்றவர்கள் சொன்னதை திரும்ப திரும்ப நானும் சொல்ல ஆசைப்படலை. கவிஞர் வாலி அவரை பற்றி சொன்னதை,அக்டோபர் 2005 இல் 'அன்றும் இன்றும் என்றும்' நிகழ்ச்சி  (ஜெயா டிவி ) வீடியோ கிடைத்தால் பாருங்கள்.