அத்தியாயம் 9
ராஜாவின்
மாற்றான மற்ற கருவிகள்
நிறைய
வகை வகையான இசை கருவிகளை தனது பாடல்களில் பயன்படுத்தியவர் ராஜா தான். 'ஹே பாடல் ஒன்று...'
என்ற ப்ரியா(1978) பாடலை கேளுங்கள்,அதில்
சிதாரை வயலின்களுக்கு கவுன்ட்டர் பாயிண்ட் ஆக உபயோக படுத்தி இருப்பார்.அதே போல பாடகர்
/ பாடகி குரலுக்கு ( கோரஸ்கு அல்ல) கவுன்ட்டர் பாயிண்ட் ஆக கிட்டரை பயன்படுத்தி இருப்பார்
' மீண்டும் மீண்டும் வா..' விக்ரம்(1986)
பாடலில்.
அப்புறம்
ஷெனாயை கவுன்ட்டர் பாயிண்ட்டாக வயலின்களுக்கும் கிட்டாருக்கும் பயன்படுத்தி இருப்பார்,'
பொத்திவச்ச மல்லிகை மொட்டு..' என்ற மண் வாசனை(1983)
பாடலில். மற்றபடி அவரின் விசை பலகை(கீ போர்டு)யும் சிந்தசெய்செர்ரும் கிட்டார்ருடனும்,
புல்லான்குழலுடனும் வயலின்லுடனும் கவுன்ட்டர்
செய்வதை நிறைய பாடல்களில் கேட்க முடியும்.
சில அமேசிங்
கவுன்ட்டர் பாயிண்ட் கம்போசிசன்:
1.'மகராஜனோடு...' - சதிலீலாவதி(1995)
2.'இன்னும்
என்னை...' - சிங்காரவேலன்(1992)
3.'குருவாயூரப்பா...' -
புது புது அர்த்தங்கள்(1989)
4.'வா
வா அன்பே அன்பே..' - அக்னி நட்சத்திரம்(1988)
5.'வளையோசை..' - சத்யா(1998)
முதல்
interlude
லேயே இரண்டு சிறந்த counterpoints
, முதலில் கீ போர்டும் புல்லாங்குழலும், இரண்டின் வேகத்தையும்
கவனிக்கவும். இரண்டாவது வயலினும் கீ போர்டும். நான் சொல்லும் டைம்மிங்கில் கவனிக்கவும்.
1)
0.05 - 0.10 sec ,1.00
- 1.05 sec
,மற்றும் 1.47 - 1.52 sec
,இது எல்லாம் repeated
sections . இதில்
ஒரு சிந்தசைசெர் அடுத்த சிந்தசைசெர்க்கு கவுன்ட்டர்
கொடுக்கும். ஆனால் இதை ஒருத்தரே வாசிக்கலாம்.
2).
0.15 - 0.24 sec
, சிந்தசைசெர் வயலின்கு கொடுக்கும் கவுன்ட்டர்.
3).
0.41 - 0.49 sec வயலின் சிந்தசைசெர் கொடுக்கும் கவுன்ட்டர்.
4).1.28
– 1.37 sec வயலின் சிந்தசைசெர் கொடுக்கும் கவுன்ட்டர்.
இந்த
பாடல்களை கேளுங்கள்....
ராஜவுடம்
ஒரு நல்ல திறமையான கீ போர்டு வாசிப்பவர் இரண்டு தசாப்தங்களாக அவருடன் இருக்கிறார்,
அவர் பெயர் விஜி மானுவல். ராஜாவின் உயிரோட்டமான
பாடல்களை அப்படியே தருவதில் முக்கிய பங்கு வகிப்பவர்.
4 comments:
கலக்கலான ஊடுருவிப்பார்க்கும் பதிவு...நன்றி
நன்றி
Super. Thanks for sharing the works of genius.
நன்றி Kumar.S
Post a Comment