Thursday, June 14, 2018

ராக தேவனின் ராகங்கள் (தேஷ்)



நான் ராஜா சாரின் ரெம்ப பிரபலமாகாத பாடல்களில் கவனம் கொண்டேன். 


அப்படி ஒரு பாடல் தான் ''தீர்த்தக்கரையினிலே(1987)'' படத்தில் வரும் ''விழியில் புது கவிதை படித்தேன் ...'' பாடல்,மனோ,சித்ரா பாடியது. ஆனால் ராகத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்தும் ராகம்  "தேஷ்'' (Dhesh) (ஒரு இந்துஸ்தானி ராகம் , கர்நாடக இசையை  அழகாக ஏற்றுக் கொண்டது).

https://www.youtube.com/watch?v=5eEgJa734io 

அந்த பாடலில் வியந்த விஷயங்கள் பல.


1. ஆரம்பமே ஷெனாய் சந்தோஷமாக ஆரம்பிக்கும்,  ராஜ சாரை தவிர....மகிழ்ச்சியை வெளிப்படுத்த உலகில் யாருமே ஷெனாயைப் பயன்படுத்தியிருக்கிறார்களா? (''பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...''  பாட்டிலும் 01.15 லிருந்து 01.23 வரை வரும் ஷெனாய் பீஸ் ஸை கேளுங்கள்.)

2. பின்னணியில் மயக்கும் பேஸ் கிட்டார் ஒரு தனி மெலோடியை பாடி செல்லும்.

3. இந்த பாட்டில் இரண்டு  இடங்களில்  Synthesizer  00:12 முதல் 00:17 விநாடிகளுக்கு இடையே, பின்னர் 2:54 முதல் 2:59 வரை, have made me wonder how is it possible to play the instrument like a Veena or Violin with so much emphasis on the கமகம்.

4. பொங்கும் காதலை  ஒரு ஆர்வத்துடன் பாடல் முழுதும் கொண்டு செல்லும் வயலின்கள்.

 



தேஷ் ராகத்தில் அமைந்த ராஜா சார் பாடல்கள் சில:


கோபியர்கள் எங்கு உண்டோ       - மல்லு வேட்டி மைனர் (1990)
கண்ணீர்  துளி                 - ராஜா கையை வச்சா (1990)
பூங்குயில் பொன்மலையில்     - தழுவாத கைகள் (1986)
உனக்கு தானே இந்நேரமா      - பொண்ணு ஊருக்கு புதுசு  (1979)

என்ன மனுஷன் ஐயா இந்த ஆள் !!! சான்ஸே இல்லை, சாஷ்டாங்க நமஸ்காரம். 




2 comments:

Anonymous said...

https://www.youtube.com/watch?v=Uv67prGoXiM மகிழ்ச்சியை வெளிபடுத்த ஷெனாய்

Kesava Pillai said...

Thank You.ராஜ சாரை தவிர....மகிழ்ச்சியை வெளிப்படுத்த உலகில் யாருமே ஷெனாயைப் பயன்படுத்தியிருக்கிறார்களா?