Monday, December 2, 2024

கலைஞர்களின் நம்பகத்தன்மை


·         




The Go Giver
நூலில் இருந்து The five laws of stratospheric success ,

·          The Law of Value: Your worth is determined by how much more you give than you take in.

·         The Law of Compensation: Your income is determined by how many people you serve and how well you serve them.

·         The Law of Influence: Your influence is determined by how much you focus on other people's interests.

·         The Law of Authenticity: The most valuable gift you can offer is yourself.

·         The Law of Receptivity: To give effectively, you must be open to receiving. 

 

இந்நூலை எழுதியவர் பாப் பர்க் ( Bob Burg). வணிகத்துறையில் வெற்றி பெறுவது குறித்த விதிகள் இவை. வணிகம் என்றில்லை. நாம் எத்துறையில் ஈடுபட்டிருக்கிறோமோ அதை ஒழுங்குபடுத்த இவரது சில கருத்துகள் உதவலாம்.

 

பிறகு Youtube  ஸ்க்ரால் செய்தேன். விடுதலை 2 மேடை அது. இளையராஜாவை திமிர் பிடித்தவர் என்கிறார்கள். அவரது அனுபவம் என்ன. மேதைமை என்ன. வெற்றிமாறனிடம் ' நீ தான் என் குரு!' என்கிறார். 'உன்னிடம் நான் கற்றுக் கொள்கிறேன்' என்கிறார். சூரி, விஜய்சேதுபதி போன்றோரை இயல்பாக கலாய்க்கிறார்.

 

Go giver நூல் சொல்லும் விதிகளுள் ஒன்று the law of authenticity. அதில் பாப் பர்க் சொல்கிறார்.' நீங்கள் வழங்க வேண்டிய மிக மதிப்புமிக்க பரிசு நீங்களே'. இளையராஜா இச்சமூகத்துக்கு தன்னையே பரிசளித்தவர். Authenticity என்பது வெறும் சொல் அல்ல. அது ஒரு தத்துவம். ஒரு கோட்பாடு.

 

இளையராஜா போன்றோரை இச்சமூகம் தன் மந்தை ஒழுங்கோடு தொடர்புபடுத்தி பிதற்றுகிறது. கலைஞர்களின் நம்பகத்தன்மை (Authenticity) தனித்துவமானது. சமூகத்தின் வெளிப்புற அழுத்தங்களுக்குப் பணிந்து ஒரு கலைஞரால் நம்பகத்தன்மை வாய்ந்தவராக இருக்க முடியாது.கலைஞர்களுக்கே உரிய உள்ளுணர்வு , இயற்கையோடான தொடர்பு இவற்றால் இச்சமூகத்தோடு ஒரு எதிர்ச் சமன்பாட்டை ராஜா போன்ற கலைஞர்கள் உருவாக்குகிறார்கள்.

 

பாடலின் மூலம் நான் வானத்தில் ஒரு புள்ளியை வைக்க விரும்புகிறேன்! என்கிறார், விடுதலை 2 மேடையில் ராஜா. இந்தப் பேச்சை ஒருவர் எப்படி தருக்கத்தின் உதவியில் புரிந்து கொள்ள முடியும்?

 

குளிர்காய விரும்பி, ஒரு கணப்பைத் தயாரிக்க விரும்பினால், நீங்கள் சுள்ளிகளைச் சேகரிக்க வேண்டும். ஆனால், மக்கள் முதலில் கொஞ்சம் சூட்டைக் கொடுங்கள். காய்ந்த பிறகு நாங்கள் சுள்ளிகளைத் தேடுகிறோம் என்கிறார்கள். இப்படியாக வருத்தப்படுகிறார் பாப் பர்க்.

 

சிந்தனை சோம்பேறிகளோடு வாழும் இக்கட்டை எப்போதும் கலைஞர்கள் அனுபவிக்கிறார்கள். ஒரு மனிதர் தனியாக நிற்கிறார் என்றால், அவர் நிலவுகிற மதிப்பீடுகளுக்கு எதிராக,ஒரு புதிய மதிப்புட்டைத் தொடங்க விரும்புகிறார் என்பது பொருள்.

 

சமூகம் எதை நித்திய மதிப்பீடாகக் கருதுகிறதோ, அதைக் கலைக்க விரும்புகிறார். அவர் கூறுவது தம் பழக்கத்துக்கு பொருந்தாதபோது அவரை திமிர் பிடித்தவர் என்கிறது இச்சமூகம்.

விடுதலை மேடையில் கவனிக்கிறேன்.

மேதையான ராஜா ஒரு குழந்தையைப்போல் இருக்கிறார்.

 

கு .கேசவ பிள்ளை