Tuesday, March 3, 2026

கூட்டு களவாணிகள்


மிகவும் ரகசியமான சிப் ஒன்றை, ராணுவத்தின் ஒரு ரோபோ நாய் தவறுதலாக விழுங்கிவிடுகிறது. அந்த நாய் காணாமல் போய்விடுகிறது. உளவுத்துறை அதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் ரோபோ நாயைக் கண்டுபுடிக்கவே முடியவில்லை. எனவே அந்த ரோபோவை உருவாக்கிய ரிட்டையர்டு ஜெயிலர் முத்துவேல் பாண்டியனை அணுகலாம் என்று முடிவு செய்கிறார்கள். கள்கூத்தியா பல்கலைக்கழகத்தில் தலேவர் புராஜக்ட் செய்யும் போது உருவாக்கி ராணுவத்திடம் ஒப்படைத்த ரோபோ அது. அவருடன் முன்னாள் ரகசிய ஏஜென்ட் விக்ரம்-ஐயும் அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொள்கிறார். இருவரும் ஒர்க்‌ஷாப் என்ற பெயரில் அழகான பெண் மெக்கானிக்குளை வைத்துக் கொண்டு அண்டர்கவர் ஆப்பரேசனில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போதுதான் உள்துறை அமைச்சரிடம் இருந்து வயர்லெஸ்சில் அவசர அழைப்பு வருகிறது.

.


கமல் சீரியஸாக, கரகரப்பான குரலில், "முத்துவேல்... நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கு. சிஸ்டம் கெட்டுப்போச்சு. அந்த ரோபோ நாயை நாமதான் காப்பாத்தணும்."

ரஜினியோ எந்தப் பதற்றமும் இல்லாமல், கார் கழுவ தண்ணீர் ஊற்றியபடியே, "முதல்ல நீ மேல இருந்து கீழ இறங்கு ஆண்டவரே... வயசான காலத்துல ஏன் இந்த வீண் வேலை? இதுக்கெல்லம் ஆள் வச்சிக்க வேண்டியதுதானே?"

கமல் (மைண்ட் வாய்ஸ்): "நான் ஒரு அப்பர்கவர் ஏஜ்ண்ட்னு பில்டப் பண்ணா, இவரு அத காலி பண்றாரே."


இருவரும் சிட்டி முழுக்க அந்த ரோபோ நாயைத் தேடி அலைகிறார்கள். தலேவரிடம் ரோபோவைக் கண்டுபுடிக்கும் லேப்டாப் இருக்கிறது. ஆனால் ரோபோவைக் கடத்தியவன் அதன் சிக்னலை அணைத்து வைத்திருப்பதால் லேப்டாப்பில் பிடிபடாமல் இருக்கிறது. ஒரு நாள் ஒரு பெரிய மாலில் இருவரும் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்போது தலேவர் லேப்டாப்பை ஆன் செய்கிறார். அது அங்கே ரோபோ இருக்கும் சிக்னலைக் காட்டுகிறது. அந்த ரோபோ நாய் அந்த பிரம்மாண்டமான மல்டிபிளக்ஸ் மாலுக்குள் ரகசியமான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இருவரும் மாலுக்குள் அந்த இடத்திற்குள் ரகசியமாக நுழைகிறார்கள். அங்கே மால் ஓனராக இருக்கும் சர்வதேச தாதாவான வில்லன் பவானியின் அடியாட்கள் 50 பேர், பிணைக் கைதிகளை தரையில் உட்கார வைத்துள்ளனர். அதில் ஒரு பிணைக் கைதியாக ஸ்விக்கி டெலிவரி பாயான யோகி பாபு இருக்கிறார்.


கமல் கையில் இருக்கும் ஒரு கருப்பு சூட்கெசை திறக்கிறார், அது ஒரு பெரிய மேக்கப் கிட்...

கமல்: "முத்துவேல், இப்போ நான் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மாதிரி மாறுவேஷம் போடப் போறேன். அந்த இந்தியன் தாத்தா மாஸ்க் போட எனக்கு 4 மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் நீ கவர் பண்ணு."

ரஜினி: "அது செட் ஆகாது... நாம இப்ப நெல்சன் படத்துல இருக்கோம். இங்க மேக்கப்லாம் தேவை இல்ல, மேஜிக்தான் தேவை."


ரஜினி கூலாக நடந்து அடியாட்கள் முன் செல்கிறார்.

அடியாள் அல்லக்கை: "ஏய் பெருசு, யாரா நீ?"

ரஜினி எந்த பதிலும் சொல்லாமல், தன் சட்டைப் பையில் இருந்து ஒரு சின்ன ஆணியை எடுத்து, அடியாளின் கழுத்தில் உள்ள வர்மப் புள்ளியில் 'டக்' என குத்துகிறார். ஆனால் அடியாள் சாகவில்லை, மாறாக அவனுக்கு தொடர்ச்சியாக தும்மல் வருகிறது.

கமல் (பின்னால் இருந்து): "அடப்பாவமே! அது வர்மப் புள்ளி இல்ல, சைனஸ் பாயிண்ட்! தப்பா குத்திட்டியே!"


ரஜினி சலித்துக்கொண்டு, தன் ஷூவுக்குள் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து, பார்க்காமலேயே சுடுகிறார். குண்டு சுவரில் பட்டு, எகிறி, அடியாளின் தலையில் பட்டு அவன் விழுகிறான். ரஜினி கூலிங் கிளாஸை மாட்டுகிறார். அனிருத் பிஜிஎம் தெறிக்கிறது.


யோகி பாபு (ரஜினியைப் பார்த்து): "என்ன சார், ஏதோ கேரம் போர்டு விளையாடுற மாதிரி சுடுறீங்க? இதுலாம் ரொம்ப ஓவர்!"


ரஜினி, கமல், மற்றும் அவர்களுடன் மாட்டிக்கொண்ட யோகி பாபுவும் லிஃப்டில் செல்கிறார்கள். லிஃப்டுக்குள் பயங்கரமான அமைதி


கமல் திடீரென உணர்ச்சிவசப்பட்டு தத்துவம் பேசுகிறார். "இந்த ரோபோ நாய்ங்கறது ஒரு குறியீடு. மனிதனின் பேராசை, அறிவியலை எப்படி அழிவுக்குப் பயன்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று..."

ரஜினி (கமலின் தோளில் தட்டி): "ஆண்டவரே, அது வெறும் எந்திரன் படத்துல எக்ஸ்ட்ராவா செஞ்ச ஒரு பீஸ். அத போய் ஏன் இவ்வளவு காம்ப்ளிகேட் பண்றீங்க? எனக்கு ஒரு பில்டர் காபி கிடைச்சா நல்லாருக்கும்."


லிஃப்ட் திறந்ததும் அங்கே ரத்தக் களறியாக இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லி (மாலின் செக்யூரிட்டி) ஒரு சேரில் கை, கால் கட்டப்பட்டு கிடக்கிறார்.

ரெடின் கத்துகிறார் "ஐயையோ! அந்த நாயை வில்லன் விடிவி கணேஷ் தூக்கிட்டு போயிட்டாரு! செட்டிங் மாத்தி வச்சுட்டாரு! அது இப்போ யாரைப் பாத்தாலும் கடிக்குது!"


கமலும், ரஜினியும் மாலின் உச்சிக்குச் செல்கிறார்கள். வில்லன் விடிவி கணேஷ், அந்த ரோபோ நாயை ஒரு இரும்பு கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார்.


விடிவி கணேஷ்: "ஏய்யா! என்னையா அடிக்க வந்தீங்க? அந்த சிப் எனக்கு வேணும்யா!"


கமல் உடனே தன் முதுகில் கட்டியிருந்த பிரம்மாண்டமான பீரங்கியை எடுக்கிறார். அதை அசெம்பிள் செய்யவே 10 நிமிடம் ஆகிறது.

கமல்: "இது இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட..." என்று ஆரம்பிக்கிறார்.

விடிவி கணேஷ் காத்திருந்து கடுப்பாகி "யோவ்! நீ மெஷினை ரெடி பண்ணி முடிக்கிறதுக்குள்ள இந்தியன் பார்ட் நாலே ரிலீஸ் ஆகிடும் போலயே! சீக்கிரம் சுடுயா!"


கமல் ட்ரிக்கரை அழுத்துகிறார். அதிலிருந்து பெரிய சத்தத்துடன் ஒரே ஒரு 'புஸ்வானம்' மட்டும் வருகிறது.

யோகி பாபு: "சார், அதான் விக்ரம் படத்துலயே எல்லா புல்லட்டையும் காலி பண்ணிட்டீங்களே, அப்புறம் எப்படி சுடும்?"


உடனே ரஜினி தன் ஸ்டைலில் வாக்கிங் ஸ்டிக்கை சுழற்றுகிறார். அதிலிருந்து ஒரு வாள் வெளிவருகிறது. அதை எடுத்து வில்லனின் கூண்டை நோக்கி வீசுகிறார். அது சரியாக கூண்டின் லாக்கை உடைக்கிறது. ரோபோ நாய் வெளியே வருகிறது.


அந்த நாய் ரஜினியை கடிக்கப் பாய்கிறது.

ரஜினி உடனே தன் பழைய பாஷா ஸ்டைலில் கண்ணை உருட்டி, "உள்ளே போ!" என கர்ஜிக்கிறார். நாய் பயந்துபோய், விழுங்கிய சிப்பை அப்படியே கக்கிவிட்டு ஓடிவிடுகிறது.


கமல் ஆச்சர்யமாக "இது என்ன டெக்னாலஜி? எப்படி நாய் சிப்பைக் கக்கிச்சு?" என்று கேக்கிறார்

ரஜினி: "டெக்னாலஜி இல்ல ஆண்டவரே... பயம்! நான்லாம் அப்பவே சிட்டி ரோபோக்களுக்கு பாடம் எடுத்தவன்"


ரஜினியும் கமலும் சிப்பை எடுத்துக்கொண்டு மாலில் இருந்து வெளியே வருகிறார்கள். பின்னணியில் மால் பெரிய சத்தத்துடன் வெடிக்கிறது.


ரஜினி ஸ்லோ மோஷனில் நடந்தபடி, "ஆமா, நீ ஏன் அந்த மால வெடிக்க வச்ச?"


கமல், "நான் வெடிக்க வைக்கல. வெடிக்கக் கூடாதுனு நினைக்கல. ஆனா வெடிச்சா தப்பு இல்லைனுதான் நினைக்கிறேன்.. எதுக்கும் இருக்கட்டும்னு அங்க இருந்த கேஸ் சிலிண்டர ஓப்பன் பண்ணி வச்சேன்.. இப்பதான் எவனோ சிகரட் பத்த வச்சிருப்பான் போல. என்ன பண்ணாலும் இந்த சமூகம் திருந்தாது!"


இருவரும் இருட்டிற்குள் நடந்து மறைகிறார்கள். யோகி பாபு பின்னால் ஓடி வந்தபடி "ஏய் பெருசுகளா! என்னை ஏன்டா உள்ள விட்டுட்டு வந்தீங்க? எனக்கும் சேர்த்து ஒரு ஆட்டோ பிடிங்கடா!"


திரையில் 'MUDINJITHU' என பெரிய எழுத்துக்களில் வருகிறது... 

 



Monday, December 2, 2024

கலைஞர்களின் நம்பகத்தன்மை


·         




The Go Giver
நூலில் இருந்து The five laws of stratospheric success ,

·          The Law of Value: Your worth is determined by how much more you give than you take in.

·         The Law of Compensation: Your income is determined by how many people you serve and how well you serve them.

·         The Law of Influence: Your influence is determined by how much you focus on other people's interests.

·         The Law of Authenticity: The most valuable gift you can offer is yourself.

·         The Law of Receptivity: To give effectively, you must be open to receiving. 

 

இந்நூலை எழுதியவர் பாப் பர்க் ( Bob Burg). வணிகத்துறையில் வெற்றி பெறுவது குறித்த விதிகள் இவை. வணிகம் என்றில்லை. நாம் எத்துறையில் ஈடுபட்டிருக்கிறோமோ அதை ஒழுங்குபடுத்த இவரது சில கருத்துகள் உதவலாம்.

 

பிறகு Youtube  ஸ்க்ரால் செய்தேன். விடுதலை 2 மேடை அது. இளையராஜாவை திமிர் பிடித்தவர் என்கிறார்கள். அவரது அனுபவம் என்ன. மேதைமை என்ன. வெற்றிமாறனிடம் ' நீ தான் என் குரு!' என்கிறார். 'உன்னிடம் நான் கற்றுக் கொள்கிறேன்' என்கிறார். சூரி, விஜய்சேதுபதி போன்றோரை இயல்பாக கலாய்க்கிறார்.

 

Go giver நூல் சொல்லும் விதிகளுள் ஒன்று the law of authenticity. அதில் பாப் பர்க் சொல்கிறார்.' நீங்கள் வழங்க வேண்டிய மிக மதிப்புமிக்க பரிசு நீங்களே'. இளையராஜா இச்சமூகத்துக்கு தன்னையே பரிசளித்தவர். Authenticity என்பது வெறும் சொல் அல்ல. அது ஒரு தத்துவம். ஒரு கோட்பாடு.

 

இளையராஜா போன்றோரை இச்சமூகம் தன் மந்தை ஒழுங்கோடு தொடர்புபடுத்தி பிதற்றுகிறது. கலைஞர்களின் நம்பகத்தன்மை (Authenticity) தனித்துவமானது. சமூகத்தின் வெளிப்புற அழுத்தங்களுக்குப் பணிந்து ஒரு கலைஞரால் நம்பகத்தன்மை வாய்ந்தவராக இருக்க முடியாது.கலைஞர்களுக்கே உரிய உள்ளுணர்வு , இயற்கையோடான தொடர்பு இவற்றால் இச்சமூகத்தோடு ஒரு எதிர்ச் சமன்பாட்டை ராஜா போன்ற கலைஞர்கள் உருவாக்குகிறார்கள்.

 

பாடலின் மூலம் நான் வானத்தில் ஒரு புள்ளியை வைக்க விரும்புகிறேன்! என்கிறார், விடுதலை 2 மேடையில் ராஜா. இந்தப் பேச்சை ஒருவர் எப்படி தருக்கத்தின் உதவியில் புரிந்து கொள்ள முடியும்?

 

குளிர்காய விரும்பி, ஒரு கணப்பைத் தயாரிக்க விரும்பினால், நீங்கள் சுள்ளிகளைச் சேகரிக்க வேண்டும். ஆனால், மக்கள் முதலில் கொஞ்சம் சூட்டைக் கொடுங்கள். காய்ந்த பிறகு நாங்கள் சுள்ளிகளைத் தேடுகிறோம் என்கிறார்கள். இப்படியாக வருத்தப்படுகிறார் பாப் பர்க்.

 

சிந்தனை சோம்பேறிகளோடு வாழும் இக்கட்டை எப்போதும் கலைஞர்கள் அனுபவிக்கிறார்கள். ஒரு மனிதர் தனியாக நிற்கிறார் என்றால், அவர் நிலவுகிற மதிப்பீடுகளுக்கு எதிராக,ஒரு புதிய மதிப்புட்டைத் தொடங்க விரும்புகிறார் என்பது பொருள்.

 

சமூகம் எதை நித்திய மதிப்பீடாகக் கருதுகிறதோ, அதைக் கலைக்க விரும்புகிறார். அவர் கூறுவது தம் பழக்கத்துக்கு பொருந்தாதபோது அவரை திமிர் பிடித்தவர் என்கிறது இச்சமூகம்.

விடுதலை மேடையில் கவனிக்கிறேன்.

மேதையான ராஜா ஒரு குழந்தையைப்போல் இருக்கிறார்.

 

கு .கேசவ பிள்ளை